தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் இன்று (நவ.03) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக, பாமக, தேமுதிக உறுப்பினர்கள் 11 பேர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய புத்தகம் தங்கள் பார்வைக்கு வைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அலுவலர்கள், குழு தலைவர் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர்கள் 11 பேரும் கூட்டத்தைப் புறகணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ.7 கோடி ஊராட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளோம். முறையான விளக்கம் அளிக்கவில்லை. அதன் தீர்மானப் புத்தகத்தையும் காண்பிக்கவில்லை, அதனால் கூட்டத்தை புறக்கணித்தோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊராட்சிக்குழுக் கூட்டம்: கேள்வி எழுப்பிய அதிமுக ஊராட்சி உறுப்பினர்