தருமபுரி: கோடை விடுமுறைக் காலம் என்பதால் சுற்றுலாத் தளங்களில் மக்கள் எண்ணிக்கை ஒகேனக்கல் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மலைப்பகுதியில் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே 60 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பென்னாகரம் மற்றும் தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் கவிழ்ந்த பேருந்து அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க்கும். விபத்து காரணமாக பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பல்வீர்சிங் மீதான புகார்களை வாபஸ் பெறும்படி எஸ்.பி. மிரட்டினாரா? - வக்கீல் கைதின் பின்னணி என்ன?