தருமபுரி: இராமியன அள்ளி தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (ஆகஸ்ட் 24) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக முக்கியப் பங்கு வகிப்பது விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள். குறிப்பாக, பால் உற்பத்தி இதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
கடந்த காலங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி வழங்குவது, அவர்களுக்கு காப்பீடு, கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சற்று தொலைவில் இருந்தது. தற்போது இந்த வசதிகளை பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில் தமிழக அரசு மாவட்டம்தோறும் இது போன்று வங்கிகள் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களை இணைத்து கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் குறித்த பயிற்சியை அளித்துள்ளது. இது போன்ற அரசின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி கனிசமான அளவு அதிகரிக்கும். ஆவின் மூலம் வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் உபபொருட்கள் தரமான முறையில் விற்பனை செய்து வருவதால், இதற்கான தேவை அதிகரித்துள்ளது.
மேலும், இந்தப் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், அனைத்து பகுதிகளிலும் பால் உப பொருட்கள் கிடைப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் வேண்டிய முயற்சியை ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வெகுவிரைவில் தட்டுப்பாடின்றி இப்பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
-
தர்மபுரி ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/PWyhxBdFpQ
— Mano Thangaraj (@Manothangaraj) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தர்மபுரி ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/PWyhxBdFpQ
— Mano Thangaraj (@Manothangaraj) August 24, 2023தர்மபுரி ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/PWyhxBdFpQ
— Mano Thangaraj (@Manothangaraj) August 24, 2023
ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்களை கடந்த தீபாவளி பண்டிகையை விட, வருகிற தீபாவளி பண்டிகைக்கு 25 சதவீதம் கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், பால் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய இரண்டையும் மேற்கொண்டு வருகிறது. மற்ற நிறுவனங்களின் பால் விலையைக் காட்டிலும், ஆவின் பால் விலை குறைவாகவே உள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்த முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வோம்.
இதனிடையே, விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் கடன் உதவி, உடனடியாக பண பட்டுவாடா, காப்பீடு வசதிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கால்நடைத் தீவனம் தயாரிக்கும் மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும், விவசாயிகளுக்கு ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்கி வருகிறது.
இந்த தீவனத்தின் தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளில் உள்ள உயர் தொழில்நுட்பங்களையும் இதில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது” என கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முறையாக AI முறையில் கரோனரி தமனி சுருக்க சிகிச்சை!