ETV Bharat / state

நிவாரண உதவிக்கு இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் - அமைச்சர் அன்பழகன் - தர்மபுரி மாவட்டம்

தருமபுரி: கரோனா வைரஸ் நிவாரண நிதி உதவியைப் பெற இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்று மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் அன்பழகன்
அமைச்சர் அன்பழகன்
author img

By

Published : Apr 19, 2020, 1:00 PM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட, தொழிலாளர் நலத் துறையில் பதிவுசெய்து முறையாகப் புதுப்பித்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா வைரஸ் நிவாரண நிதி, மளிகைப் பொருள்களை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்
நிவாரண பொருள்களை வழங்கிய அமைச்சர்

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன்,

"கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் வேலையின்றி பொருளாதார ரீதியில் பெரிதும் சிரமத்தில் இருக்கும் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என இரண்டு மாதத்திற்கு 2000 ரூபாய் வழங்க தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாநில அரசு வழங்கிவருகிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண பொருள்களை வழங்கிய அமைச்சர்

தொழிலாளர்கள் முறையாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவுகளைப் புதுப்பித்து அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு வழங்கும் இரண்டாயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களை நம்பாமல், அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி வங்கி கணக்கு எண்களைப் பதிவுசெய்து நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

மேலும் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதுமே 13 லட்சம் தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்டம் வழங்கப்பட்டுவரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 785 தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகக் கூறினார்.

எனவே, தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளைப் பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

இதையும் பார்க்க: கரோனா: 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் 75 விழுக்காடு உயிரிழந்தனர் - சுகாதாரத்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.