தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள், மாவட்டத்தில் மின்சார மூன்று சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
தொடக்க நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் கார் போன்ற மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் இயந்திரம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரம் ரூபாய் முதல் ஆறு கோடி ரூபாய் வரையிலான பல்வேறு வகையிலான சார்ஜ் செய்யும் இயந்திரங்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஈமென் நிறுவனத்தின் சார்ஜ் செய்யும் இயந்திரம் இந்தியாவிலேயே முதல்முறையாக குறைந்த விலையில் இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள டீ கடைகள் மளிகை கடைகள் போன்றவற்றில் கூட இந்த சார்ஜ் இயந்திரத்தின் மூலம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு சார்ஜ் செய்யலாம்.
சோலார் வசதியுடன் பெரிய முதலிட்டிலும் சார்ஜ் செய்ய தனியாக நிலையங்கள் அமைத்தும் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும், குறைந்த செலவில் நிரந்தர வருவாயைத் தரும் என்பதால் தர்மபுரி போன்ற பகுதிகளில் அறிமுகம் செய்வதாகவும், இந்தியா முழுவதும் உள்ள சாலைகளில் முக்கிய இடங்களில் ஐந்து கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறைந்த முதலீட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது தங்களின் நோக்கம் என நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ரூ.5 செலவில் 25 கிமீ பயணம்... கோவை மாணவர்களின் அசத்தும் மின்சார வாகனம்...!