தருமபுரி: திருவள்ளுவர் தினம் மற்றும் வருகிற ஜன.26ஆம் தேதி வியாழக்கிழமை குடியரசு தினம் என்பதால் இரண்டு நாட்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ், செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடம், என அனைத்திலும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் தினத்தில் மதுக்கடைகள் விடுமுறை என்பதால் மதுபானக்கடைகளில் மதுப்பிரியர்கள், தங்களுக்குத் தேவையான மதுவை இன்று வாங்கி குவித்தனர். இதனால் மதுபானக் கடைகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் ஒவ்வொருவரும், மூன்று, நான்கு என அள்ளிச் சென்றனர்.
விடுமுறை என்பதால், பொங்கலுக்கு கள்ளத்தனமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களும் சாக்கு பைகளில் மது வாங்கிச் சென்றனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளில் பொங்கல் பண்டிகை மற்றும் கடை விடுமுறை எதிரொலியால், வழக்கத்தை விட, ஒரு மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனையானது.
இதையும் படிங்க: கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை - Influence காட்டிய பார் உரிமையாளர் சோசியல் மீடியாவால் சிக்கினார்