ETV Bharat / state

வெளவால்களைப் பாதுகாக்க சத்தமில்லாத தீபாவளி கொண்டாடும் பல்லேனஅள்ளி கிராமம்! - தர்மபுரியில் வெளவால்களை பாதுகாக்கும் கிராம மக்கள்

தருமபுரி: பாலக்கோடு அருகே வெளவால்களைப் பாதுகாக்க வெடி வெடிக்காமல் பல்லனேஅள்ளி கிராம மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

வெளவால்களை பாதுகாக்கும் கிராம மக்கள்
author img

By

Published : Oct 26, 2019, 10:09 AM IST

தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பாலுட்டி வகையைச் சேர்ந்த பறக்கவல்ல விலங்கான வெளவால்களுக்காக வெடி சத்தம் இல்லாமல் அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

அந்தவகையில், பாலக்கோடு அருகே உள்ள பல்லேனஅள்ளி கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள முனியப்பன் கோயிலைச் சுற்றி மிகவும் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம், புளியமரம் என ஐந்து மரங்கள் அமைந்துள்ளன. இந்த மரக்கிளைகளில் கீச்கீச் என காதுகளுக்கு இனிமையான இசை வழங்கி பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்துவருகின்றன.

வெளவால்களைப் பாதுகாக்கும் கிராம மக்கள்

இரவு நேரங்களில் இரை தேடி காட்டுக்குச் சென்று பின் விடியற்காலையில் ஓய்விற்காக இந்த மரங்களை வந்தடைகிறது. தீபாவளிப் பண்டிகை வெடிச்சத்தங்களுக்கு பஞ்சமில்லாமல் கொண்டாடப்படும் நேரத்தில் இப்பகுதி மக்கள் வெளவால்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளியைக் கொண்டாடிவருகின்றனர்.

வெளவால்கள் குடியிருக்கும் மரங்களுக்கு கீழ் உள்ள கோயிலில் திருவிழா நடந்தால்கூட வெடி வெடிப்பதில்லை. மேலும் இங்குள்ள தெய்வங்களோடு இந்த வெளவால்களையும் இணைத்து தொன்றுதொட்டு வழிபட்டுவருகின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்தக் கிராம மக்கள் வௌவால்களைப் பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை தியாகம் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க : சிறுகை அருகே குருவிகளை பாதுகாக்கும் விவசாயி...

Intro:தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீபாவளி திருநாளிலும் வெளவால்களை பாதுகாக்க வெடிவெடிக்காத கிராம மக்கள்.Body:தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீபாவளி திருநாளிலும் வெளவால்களை பாதுகாக்க வெடிவெடிக்காத கிராம மக்கள்.Conclusion:தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீபாவளி திருநாளிலும் வெளவால்களை பாதுகாக்க வெடிவெடிக்காத கிராம மக்கள்.

தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பாலுட்டி வகையை சேர்ந்த பறக்கவல்ல விலங்கான வெளவால்களுக்காக வெடிசத்தம் இல்லாத அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். பாலக்கோடு அருகே உள்ள பல்லேனஅள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏரி கரையில் உள்ள முனியப்பன் கோயிலை சுற்றி மிகவும் பழமை வாய்ந்த பெரிய, பெரிய மரங்கள் அமைந்துள்ளன. இங்கு மரக்கிளைகளில் கொத்துக் கொத்தாக சிலுசிலு வென்றும், கீச்கீச் என காதுகளை பிளக்கும் அளவிற்கு இனியான இசையுடன் ஆல மரம், புளிய மரம் உள்ளிட்ட 5 மரங்களில் பல்லாயிரக் கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றது.
இரவு நேரங்களில் இரைத்தேடி காட்டுக்கு சென்று பின் விடியற்காலையில் ஓய்விற்காக இந்த மரங்களை வந்தடைகிறது. தீபாவளி பண்டிகை வெடிச்சத்தங்களுக்கு பஞ்சமில்லாமல் கொண்டாடப்படும் நேரத்தில் இப்பகுதி மக்கள் வெளவால்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்த பகுதியில் வௌவால்கள் இருப்பதால் கிராமத்திற்கும் மக்களுக்கும் பாதுகப்பு என கருதி, வெளவால்கள் வாழும் இந்த பகுதிகளில் எந்தவித வெடிச்சத்தத்தையும் இக்குங்குள்ள மக்கள் எழுப்புவதில்லை. மேலும் இந்த மரங்களில் உள்ள வெளவால்களை பாதுகாத்தும் வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளவால்களை கடவுளாகவும், நோய்தீர்க்கும் பாலூட்டியாகவும் வணங்கி வருகின்றனர்.
வெளவால்கள் குடியிருக்கும் மரங்களுக்கு கீழ் உள்ள கோயிலில் திருவிழா நடந்தால் கூட வெடி வெடிப்பதில்லை. மேலும் இங்குள்ள தெய்வங்களோடு இந்த வெளவால்களையும் இணைத்து தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்த கிராம மக்கள் வௌவால்களை பாதுக்காப்பதற்காக இந்த கிராமத்தில் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை தியாகம் செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.