ETV Bharat / state

தீ வைத்துக்கொண்ட மனைவி - காப்பாற்ற முயன்ற கணவனும் அடுத்தடுத்து பலி - கிருஷ்ணாபுரம்

குடும்பப் பிரச்னை காரணமாக, தீ வைத்துக்கொண்ட மனைவியை காப்பற்ற முயன்று கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனையால் தீ வைத்துக்கொண்ட மனைவி

author img

By

Published : Dec 30, 2022, 3:40 PM IST

Updated : Dec 30, 2022, 5:38 PM IST

தர்மபுரி: கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளி ரத்தினம் (27). இவருடைய மனைவி ரம்யா (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக ரம்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காளி ரத்தினம் தீயை அணைக்க முயன்றார். இதில் 2 பேருக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைப் பெற்று, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி காளி ரத்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை ரம்யாவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை!

Last Updated : Dec 30, 2022, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.