தருமபுரி: தருமபுரியின் ஒட்டப்பட்டி அவ்வை நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் சதீஷ் குமார் என்பவர் கணித ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
இவர் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர், தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று (டிசம்பர் 15) புகாரளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த இரண்டாம் கட்டமாக ரூ.17.57 கோடி நிதி ஒதுக்கீடு