நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தருமபுரியில் மூன்று திரையரங்குளில் வெளியாகியுள்ளது. வழக்கமாக நடிகர் விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் தியேட்டர் முன்பு ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்து அதற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனையடுத்து 'தனது திரைப்படத்திற்காக யாரும் ஃபிளக்ஸ் வைக்கக்கூடாது' என்று பிகில் திரைப்படத்தின் பாடல் வெளீயிட்டு விழாவில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
விஜய் வழங்கிய அறிவுரையை ஏற்கும் விதமாக இன்று அவரது ரசிகர்கள் பிகில் திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு எந்தவித பேனர்களும் வைக்காமல்; பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையும் படிங்க: டெங்குவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்