தருமபுரி: தருமபுரி மாவட்டம் புலிக்கரையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல். இவரின் மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த். பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த் அவருடைய நண்பர்களான கார்த்திக் மற்றும் அருண் ஆகிய இருவருடன் சேர்ந்து குமாரபாளையம் அருகே பிஸ்னஸ் செய்து வந்துள்ளார்.
அந்த பிஸ்னஸில் போதிய வருமானம் கிடைக்காததால் அதில் இருந்து வெளியேறிய விஜய் ஆனந்த் தான் வழங்கிய ஷேர் 25 லட்சம் ரூபாயை நண்பர்களிடம் திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால் அதை தற்போது தர இயலாது என தெரிவித்த நண்பர்கள் அதற்கான வட்டியை மாதமாதம் தருவதாக கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த விஜய் ஆனந்த் கடந்த சில மாதங்களாக அந்த பணத்திற்கான வட்டியையும் வாங்கியுள்ளார்.
ஆனால் சமீபத்தில் அந்த பணத்திற்கான வட்டியை நண்பர்கள் கார்த்திக் மற்றும் அருண் ஆகியோர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த விஜய் ஆனந்த் மீண்டும் நண்பர்களிடம் மொத்த பணத்தையும் திருப்பிக்கேட்டுள்ளார். ஆனால் நண்பர்கள் அந்த பணத்தை தர மருத்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த விஜய் ஆனந்த் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அவரின் தந்தை பழனிவேல் வெளியில் போன நேரம் பார்த்து விஜய் ஆனந்த் மற்றும் அவரின் தாய் சாந்தி ஆகிய இருவரும் வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அன்று இரவு பழவேல் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்ளே தாள் இட்டவாறும், வெளியில் விளக்குப்போடாமலும் இருந்துள்ளது.
இதையும் படிங்க:Arikomban elephant:'அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்படும்' - உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனிவேல்,வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். மனைவியும், மகனும் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்தபோது விஜய் ஆனந்த் எழுதி வைத்த கடிதம் போலீஸாரிடம் கிடைத்துள்ளது. அதில் தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருண் ஆகிய இருவரும் தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று விட்டு திருப்பி தரவில்லை எனவும் இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:Arikomban: முடிவுக்கு வந்த அரிக்கொம்பனின் ஆட்டம்.. 10 நாட்கள் வேட்டையின் முழு விபரம்!