ETV Bharat / state

ஒகேனக்கல் கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல் - பொதுமக்கள் அதிருப்தி - ஒகேனக்கல் சுற்றுலா தளம்

ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 29, 2022, 5:29 PM IST

Updated : Dec 29, 2022, 6:09 PM IST

ஒகேனக்கல் கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல் - பொதுமக்கள் அதிருப்தி

தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். வழக்கமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும் இங்கு உள்ள மீன் உணவை சுவைத்தும் சுற்றுலாவை மக்கள் கொண்டாடுவர்.

சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கட்டண கழிப்பிடம், கூத்தப்பாடி ஊராட்சியின் கீழ் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணக்கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க பத்து ரூபாய் வசூல் செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அனைவரிடமும் பத்து ரூபாய் வசூல் செய்வதாகவும் கழிவறையின் கதவு கூட முறையாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கழிப்பிடத்தின் வெளிப்பகுதியில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க, குளிப்பதற்கு என எழுதப்பட்டு அதற்கு நேராக கட்டண விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளிடம் கழிப்பறை ஒப்பந்ததாரா்கள் அவர்கள் இஷ்டம் போல கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர். தருமபுரி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறையான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க: அரசைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக முன்னாள் ஊழியர்கள் போராட்டம்!

Last Updated : Dec 29, 2022, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.