ETV Bharat / state

தருமபுரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடு: மீறினால் கடும் நடவடிக்கை - கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தருமபுரி: மக்களின் கூட்டத்தை குறைக்க தருமபுரியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

collector malarvili
collector malarvili
author img

By

Published : Apr 11, 2020, 12:09 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறுகையில், "இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் சுற்றி திரிவது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி குற்றம்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் அவா்கள் இருக்கக்கூடிய பகுதியில் இருந்து 1.5 கிலோ மீட்டா் சுற்றளவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் நடமாடும் கடைகள் இயங்கிவருவதால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் குடும்ப உறுப்பினர்கள் வாகனத்தில் சுற்றித்திரிவது சட்டப்படி குற்றம். விதிகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் போதும். அவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் அல்லது ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வழிவகை செய்யப்படும்.

தினமும் மருத்துவமனை செல்பவர்கள் சான்று பெற தருமபுரி மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அவசர கால பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.