தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து 2 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதன் காரணமாக, ஆற்றில் ஆழமான பகுதிகளில் இருந்த முதலைகள் தற்போது கரையோரங்களில் உள்ள பாறைகள் மீது உலா வரத் தொடங்கியுள்ளன.
முதலை உள்ள பகுதிகள்
ஆலம்பாடி, பிலிகுண்டு, ராசிமணல் ஆகிய பகுதிகளில் முதலைகள் தங்கள் வாழ்விடங்களை கொண்டுள்ளன. தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக அப்பகுதியில் இருந்த முதலைகள், நீர்வரத்து உயர்ந்தபோது தண்ணீா் அழுத்தம் காரணமாக இடம் பெயா்ந்த தண்ணீரில் இருந்து வெளியேறி கரையோரங்களில் ஒதுங்க தொடங்கியுள்ளன.
முதலைகள் ஆற்றங்கரையோரங்களில் சுற்றிவருவதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத் துறையினர் குளிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, முதலைகள் தென்பட்டால் அதைப் பிடித்து முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆற்றைச் சுற்றி வரும் முதலைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!