தர்மபுரி: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடைபந்து மைதானம் திறந்து வைக்கப்பட்டது. தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட இக்கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன், கலந்து கொண்டு கூடைப்பந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமப்பேரவை தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், “காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவும். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு தன்னிறைவு திட்டத்தின் மூலம் ரூ.23 இலட்சம் மதிப்பில் இந்த கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.
நான்கு மாத காலத்தில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்து போது இம்மாவட்டத்தில் வேளாண்மை பட்டய படிப்பு, தோட்டகலையில் பட்டய படிப்பு ஆகியவை கொண்டு வந்து அரசாணை வெளியிடப்பட்டு, அதற்காக 92 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டும், இந்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உள்ள அரசு மாணவர் சேர்க்கை இதுவரை நடத்தப்படவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வு தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...