ETV Bharat / state

’ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை!’

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

minister natarajan
author img

By

Published : Aug 6, 2019, 2:02 PM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. நேற்று மாலை நடந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

பின்னர் விழாவில் 212 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மேடையில் பேசியபோது, "2014ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.336.18 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்" என்றார்.

Intro:05.08.2019
தருமபுரி.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.இன்று (05.08.19)மாலை நடந்த நிறைவு விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டனர். விழாவில் 212 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர் பேசியது:

2014-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் தமிழக அரசின் சார்பில் ரூ.336.18 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஒகேனக்கல்லுக்கு ஆண்டுக்கு 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள தீர்த்தமலை ஆன்மிக சுற்றுலா தலம் வனப்பகுதியில் உள்ளது. அரூர் சட்டப் பேரவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தீர்த்தமலையில் வனத்துறை அனுமதி பெற்று வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தீர்த்தமலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றுள்ள இறுக்கமான வாழ்க்கை முறையால் புதிய இடங்களை காண வேண்டும் என ஆவல் மனிதர்களிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சுற்றுலாவுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஆசியாவிலேயே சுற்றுலாவுக்கு உகந்தது இந்திய நாடு. இந்தியாவிலேயே உகந்த மாநிலம் தமிழ்நாடு தான். தமிழக அரசு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செய்துள்ளதாலும், மின் மிகை மாநிலமாக திகழ்வதாலும் தமிழகம் சுற்றுலாவுக்கு மிக உகந்த மாநிலமாக உள்ளது.
இவ்வாறு பேசினார்.

பின்னர், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு ஒகேனக்கல்-தருமபுரி-திருப்பத்தூர் வரையிலான சாலையை மேம்படுத்தி 4 வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 13.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4 வழிச் சாலை அமைக்க ரூ.44.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Body:tn_dpi_01_adiparukuvilla_minister_prog_vis_7204444Conclusion:05.08.2019

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.