ETV Bharat / state

ஜல்லிக்கட்டு ஒன்று தான் நாட்டு மாடுகளை காக்கிறது.. 400 ஆண்டு பழமையான சந்தையில் விவசாயிகள் தரும் சிறப்பு தகவல்கள்! - ஈடிவி பாரத் தருமபுரி செய்திகள்

தமிழ்நாட்டில் நாட்டு மாடு வளர்ப்பு குறைவுக்கான காரணம், ஜல்லிக்கட்டு போட்டியின் மகத்துவம் குறித்து தருமபுரி அதியமான்கோட்டை மாட்டுச் சந்தையில் இருந்து செய்தியாளர் கோபால் வழங்கிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்..

நாட்டு மாடு இனமே அழிந்துவருவதாக விவசாயிகள் வேதனை

author img

By

Published : Apr 7, 2023, 8:03 PM IST

அதியமான்கோட்டை மாட்டுச்சந்தை சிறப்பு தொகுப்பை வழங்குகிறார் தருமபுரி செய்தியாளர் கோபால்

தருமபுரி: அதியமான் கோட்டை பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாட்டுச் சந்தை ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த மாட்டுச் சந்தை தருமபுரியை ஆண்ட மன்னன் அதியமான் காலத்திலிருந்து நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. சிலர் 400 ஆண்டுகள் பழமையான சந்தை என்றும் குறிப்பிடுகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதியமான் கோட்டை மாட்டுச் சந்தைக்கு லட்சக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு வரும் என்றும் சந்தை இரண்டு கிலோ மீட்டா் துரம் நீண்டு காணப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போது மாடுகள் வரத்து குறைந்து, லட்சம் மாடுகள் சில ஆயிரம் மாடுகளாகக் குறைந்துவிட்டது என்றும் அதற்குக் காரணம் கிராமங்களில் நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பாததே காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாட்டுச் சந்தைக்கு மாடுகளை விற்க வருபவா்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டு மாடுகளை வளர்த்து ஆண்டுக்கொரு முறை கூடும் சந்தையில் விற்பனை செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் சிறிய கன்றுகளை வாங்கி அதனை வளர்த்து விற்பனை செய்து அதன்மூலம் வருவாயை ஈட்டிவருகின்றனர்.

அதியமான் கோட்டை மாட்டுச் சந்தை பங்குனி மாதம் இறுதியில் தொடங்கி, சித்திரை மாதம் தொடக்கம் வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. நாட்டு மாட்டுச் சந்தைக்குத் தருமபுரி, சேலம், ஈரோடு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம். இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வாகி விட்டது. சந்தைக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் வந்த அதியமான் கோட்டை காளியம்மன் தேர்த் திருவிழா சந்தைக்கு 50க்கும் குறைவான மாடுகளை விற்பனைக்கு வந்துள்ளது.

மாடுகள் விற்பனை குறைவுக்குக் காரணம் விவசாயத்திற்கு மாடுகளைப் பயன்படுத்தி ஏர் உழுவது குறைந்து விட்டது. மேலும் மாட்டு வண்டியின் பயன்பாடு இல்லாத காரணத்தினாலும் மாடுகளை வாங்க யாரும் முன் வராத நிலையில் மாடுகளை விற்பனைக்கு யாரும் கொண்டு வரவில்லை எனக் கூறப்படுகிறது. விவசாயத்திற்கு டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்ததால் மாடுகளின் பயன்பாடு பெரும் அளவு குறைந்துள்ளது. கடந்த காலங்களில் ஏர் உழுவது கிணற்றிலிருந்து ஏற்றம் இரைப்பது, மாட்டு வண்டி செக்கு இழுப்பது உள்ளிட்டவருக்குப் பயன்பட்ட மாடுகள் இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்காக மட்டுமே பயன்பட்டு வருகிறது.

இச்சந்தையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடி மாடு இரண்டு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. ஆனால், தற்பொழுது ஜோடி 30 ஆயிரம் ரூபாய்க்குக் கூட வாங்க ஆட்கள் முன் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்காகத் தான் மாடுகளை வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மாடுகளுக்குச் செலவிடப்படும் தீவனத்தின் விலை உயர்வு மற்றும் மாடு பயன்பாடு குறைவு காரணமாகவே நாட்டு மாடுகள் வளர்ப்பது குறைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி இருப்பதால் ஒரு சிலர் வீடுகளில் போட்டிக்காக மாடுகளை வாங்கி வளர்க்கின்றனர். தற்போது நாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மட்டுமே வளர்க்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், தான் குறைந்த அளவிலாவது மாடுகள் சந்தைக்கு விற்பனை வந்துள்ளது என்றும் ஜல்லிக்கட்டு போட்டி இல்லை என்றால் நாட்டு மாடு இனமே அழிந்து விடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நாட்டு மாட்டுப் பால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. மற்ற மாடுகளைப் போல் அல்லாமல் நாட்டு மாடுகளை நோய் தாக்குவதும் குறைவு, பராமரிப்பு செலவு குறைவு உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கை ஏற்படுத்தினால் நாட்டு மாடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க: நம்மாழ்வார் பிறந்தநாள்: உடல் முழுவதும் சேறு பூசி இயற்கை விவசாயிகள் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.