கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் இறந்தவர் உடலை அருகிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல், வயலில் இறங்கி சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இதனால் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
![நெல் வயலின் நடுவே பிரேதத்தை எடுத்துச் செல்லும் அவல நிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-deathbodyagriculturelandway-10047_12012021190344_1201f_1610458424_802.jpg)
இந்நிலையில் இன்று கரைமேல் (72) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.அவரது உடலை அடக்கம் செய்ய நெல் வயலின் நடுவே பிரேதத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். இதனால் சுடுகாட்டிற்கு உடனடியாக பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி