கடலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12, திமுக 11, தேமுதிக 1, பாமக 2, தமாகா 2, மதிமுக 1 என்ற விதத்தில் கைப்பற்றியிருந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக கவுன்சிலர் திருமாறனும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கவுன்சிலர் கந்தசாமியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிமுக கவுன்சிலர் திருமாறனுக்கு 15 பேரும் கந்தசாமிக்கு 14 பேரும் வாக்களித்ததால் அதிமுக கவுன்சிலர் திருமாறன் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்டார்.
பின்னர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவை சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தயாநிதி போட்டியிட்டார். இதில் அதிமுக கூட்டணி தேமுதிக சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க:
ஆதாரமாக மரக்கட்டையைக் காட்டிய காவல்துறை - அன்பழகனுக்கு புழல்!