ETV Bharat / state

நெல்லிக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி!

விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி மன்றத் தலைமை பதவியை திமுகவினர் கைபற்றியதால், திமுகவை ராஜினாமா செய்யக் கூறி போராடிய விசிகவினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி

author img

By

Published : Mar 4, 2022, 10:51 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த நகர்மன்றத் தலைவர் பொறுப்பு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், இரண்டு விடுதலைச் சிறுத்தைகள் கவுன்சிலர்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு திமுக போட்டி வேட்பாளரை நிறுத்தியது. அதன் காரணமாக இன்று காலை நடைபெற்ற தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் வெற்றி பெற்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தோல்வியடைந்தனர். மாலையில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் போட்டியாக திமுக போட்டியிட்டது. துணைத்தலைவர் தேர்தலிலும் திமுக வெற்றி அடைந்ததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் அடைந்தனர். இந்த நிகழ்வு குறித்து நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா ராஜேந்திரன் நெல்லிக்குப்பம் வந்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லியபோது திடீரென துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சபா ராஜேந்திரன் அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது அவருடைய காரினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அவர்கள் கூட்டணிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவினர், தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த நெல்லிக்குப்பம் நகராட்சி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி

அப்போது சிலர் எம்எல்ஏவின் காரை வேகமாகத் தட்டத் தொடங்கியதால் காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நெல்லிக்குப்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களைக் கைப்பற்றுவதா? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.