கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடலூர் மாவட்டத்தில் 20 திட்டப்பணிகள், நான்கு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு அம்மா மருந்தகங்கள், 56 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஆய்வு மேற்கொண்ட ஏழு மாவட்டங்களில் கடலூர் மாவட்ட கூட்டுறவு துறை சிறந்து விளங்குகிறது. அதிகப்படியாக கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் பொது விநியோகம் செய்ய முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், பொதுமக்கள் உரிய பொருள்களை, உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பச்சைத்துண்டு அணிந்தவர்கள் எல்லாம் விவசாயி ஆகிவிட முடியுமா? - சி.வி. சண்முகம் கேள்வி