கடலூர் அரசு போக்குவரத்து கழகம் முன்பு அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, புதிய ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும், ஆயிரம் நாள்களுக்கு மேல் பணிசெய்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஓய்வுபெறும் தொழிலாளர்களை வெறும் கையுடன் அனுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொமுச தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் கருணாநிதி, சிஐடியு துணைத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் தொழிலாளர்கள் மாநில அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' - அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்