கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயிலில், டிசம்பர் 3 இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில், 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியர் அன்புச்செல்வன், 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி ஆசிர்வதித்தார்.
இந்த விழாவில், வேலூர் மாவட்டம் நாகவேடு பகுதியைச் சேர்ந்த ரஷீத் - அப்தா பேகம் என்ற இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள், இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.