கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அறிவித்த தடையை மீறி சாலையில் வருபவர்களையும் காவல்துறையினர் விசாரித்தனர்.
அத்தியாவசிய தேவைகள் தவிர அநாவசியமாக சுற்றித் திரிந்தவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். மீண்டும், இதுபோன்ற தவறுகள் செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரித்தும் அனுப்பினர். கடலூரில் இதுவரை 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... அவசரப் பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கம்!