கடலூர் மாவட்டம் வெள்ளிமோட்டான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமாக 2,800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதிமுக முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சேவல் குமாருக்கு செந்தில்குமார் கிரயம் செய்துள்ளார். செந்தில்குமாரிடம் நிலத்தை வாங்கிய சேவல்குமார் நிலத்தை கிரயம் செய்த பின்னர் பணம் தருவதாக கூறிவிட்டு இதுநாள் வரை பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், செந்தில்குமார் இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அப்போது, செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
நிலத்தை இழந்து மனம் உடைந்த நிலையில் செந்தில்குமார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.