ETV Bharat / state

கடலூரில் மூளைச் சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் நடந்த தகனம்!

Organ Donation: விபத்தில் மூளைச் சாவு அடைந்து உயிரிழந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.

Organ Donation
விபத்தில் மூளைச் சாவு அடைந்த விவசாயின் உடல் உறுப்பு தானம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 12:29 PM IST

விபத்தில் மூளைச் சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்பு தானம்

கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (34). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பைக்கின் டயர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி, கிருஷ்ணகுமார் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தலையில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு இவருக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவருக்கும் சுயநினைவு திரும்பாத நிலையில், அவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், கிருஷ்ணகுமாரை புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கும் மருத்துவர்கள் இவர் மூளைச் சாவு அடைந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். இதனால் கிருஷ்ணகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளனர்.

இதனை அடுத்து, கிருஷ்ணகுமார் உடலில் இருந்த இரண்டு சிறுநீரகம், கல்லீரல், கணையம் என நான்கு உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உடனடியாக அது மற்ற நான்கு நபர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கிருஷ்ணகுமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்பை தானம் செய்த முதல் நபராக கிருஷ்ணகுமார் உள்ளார். இவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதையுடன் கிருஷ்ணகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது. கிருஷ்ணகுமாருக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில், அவரது குடும்பத்திற்கும் அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூரில் பிஎம்டபிள்யூ கார் கண்ணாடியை உடைத்து ரூ.13.75 லட்சம் கொள்ளை.. வெளியான வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.