கடலூர் மாவட்டம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் டிப்ளமோ மாணவர் ஆகாஷ். இவர், தனது பல்சர் 220 இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் ஏகேஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கடலூரை நோக்கிச் சென்றுள்ளார். தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் நிலையில் சின்னாண்டிக்குழி சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதியுள்ளது.
இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஏகேஷ் காயங்களுடன் தப்பினார். விபத்துக்குள்ளான பல்சர் வாகனத்தின் பின்னால் “இந்த வேகமே ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும், யாரும் அழ வேண்டாம் சிரியுங்கள்’’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
மித வேகம் மிக நன்று போன்ற எவ்வளவோ நல்ல வாசகங்கள் இருக்கையில், உயிரின் மதிப்பு தெரியாமல் வேகத்தால் ஏற்படும் மரணத்தை பெருமையாக எழுதித் திரிந்த ஆகாஷ் போன்ற இளைஞர்கள் வாழ்வின் அருமையை எப்போது தான் உணருவார்கள் என்பது கேள்விக்குரியாகவே இருக்கிறது .
உயிரின் விலை மதிப்பற்றது என்பதை பலரும் உணர்வதில்லை. அதுவும் வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதை உணராத பலர் தற்போதைய காலகட்டத்தில் ஏதேதோ சாகசங்களில் ஈடுபட்டு உயிரை விடுகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!