ETV Bharat / state

முள்ளங்கி சாம்பாரில் எலிபேஸ்ட்..! மாமனார், மாமியாரை கொன்ற பெண் கைது.. - arrested

கடலூரில் திருமணம் மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த மாமனார் மாமியாரோடு , பக்கத்து வீட்டு குழந்தையையும் சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற மருமகள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமனார் மாமியாருக்கு சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற மருமகள்

author img

By

Published : May 24, 2023, 7:25 PM IST

Updated : May 24, 2023, 9:12 PM IST

கடலூர்: இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மேல தெருவின் மகன் வேல்முருகன் (39), என்பவர் விருத்தாச்சலம் தங்கமணி கார்டனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் பூமாலை என்பவரின் மகள் கீதா (33) என்பவரை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்.

இதில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவுக்கு புது குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் வசித்து வரும் வெங்கடேசனின் மகன் ஹரிஹரன்-44, என்பவருடன் திருமணம் மீறிய ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் இந்த விஷயம் கீதாவின் மாமியார் கொளஞ்சிக்கும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இந்த உறவை கைவிடுமாறு இருவரும் கீதாவை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கள்ளக்காதலுடன் இணைந்து கடந்த 29.12.2021 ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூர் ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தனது கணவன் வீட்டார் சாப்பிடுவதற்காக சமைத்த முள்ளங்கி சாம்பாரில் எலிபேஸ்ட் விஷத்தை கலந்துள்ளார். இதனை மாமனார் மற்றும் மாமியார் இருவருக்கும் சாப்பிட்டுள்ளனர்,

விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, அச்சமயம் பக்கத்து வீட்டு சிறுவன் நித்தீஸ்வரன் (10) வந்துள்ளான். அவனுக்கும் விஷம் கலந்திருப்பது அறியாது உணவை ஊட்டி உள்ளனர். இந்நிலையில் மூவருக்கும் அடுத்தடுத்து உடல் நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் 04.01.22 ஆம் தேதி கொளஞ்சியம், மறுநாளான 05.01.22 ஆம் தேதி சுப்பிரமணியனும், 07.01.22 ஆம் தேதி நித்தீஸ்வரனும் அடுத்தடுத்து இறந்து விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வேல்முருகன் கொடுத்த புகார் மனுவின் பேரில் கடந்த 06.01. 2022 ஆம் தேதி மங்கலம்பேட்டை காவல் நிலைய குற்ற எண்: 24/2022, U/s 174 CrPC-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராமதாஸ் அவர்கள் தீவிர புலன் விசாரணையை மேற்கொண்டு இவ்வழக்கில் கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரன் ஆகிய இருவரையும் இன்று 24.05.22 ஆம் தேதி அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்த இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு மாமனார் மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சைடிஷ் சாப்பிட்டதால் இளைஞர் வெட்டி கொலை.. கொலையாளி கைது..

Last Updated : May 24, 2023, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.