பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதிக்கு கேரள வனப்பகுதி வழியாக இடம் பெயர்ந்த காட்டு யானைகள், தங்களது குட்டிகளுடன் ஆக்ரோஷமாக காணப்படுகின்றன.
இதற்கிடையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் நவமலை, சின்னார் உள்ளிட்ட இடங்களில் யானைக்கூட்டம் வராமல் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நவமலை வழியாக செல்லும் மின்சார ஊழியர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆழியாறு அணையின் கரையோரம் யானை கூட்டம் தென்படுவதால் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது; மீறினால் அபராதம் விதிக்க கூடும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் யானை... மலை ரயில் பயணிகள் உற்சாகம்...