ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மீது ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்தது ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி - EB bill hike

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மீது ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்தது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மீது ரூ.1.59 லட்சம் கோடி கடன் வைத்தது ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

author img

By

Published : Jul 22, 2022, 10:48 PM IST

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் இன்று முதல் ஜூலை 31 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் 280 அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் பெரியார், அப்துல் கலாம், திருவள்ளுவர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் புத்தக திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை புத்தக திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், வரும் 28ஆம் தேதி 5,000 மாணவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இங்கு பயனுள்ள நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதற்கு, கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகச் சீர்கேடு தான் காரணம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

1,50,000 கோடி ரூபாய்க்கு கடன் சுமை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 16,500 கோடி வட்டி செலுத்தக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மின்சார வாரியம் உற்பத்தி செய்தது. மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. மின்மிகை மாநிலம் என்றால், 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பிற்காக 21 ஆண்டுகள் ஏன் காத்திருக்கிறார்கள்?. 2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திட்டங்களை விரைவாக முடிக்க உத்தரவிட்டு, வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் 6,220 மெகாவாட் கூடுதல் நிறுவனத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலுவையில் இருந்த திட்டங்களுக்காக 12,600 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக வட்டி மட்டும் கட்டப்பட்டுள்ளது.

மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள கட்சிகள் கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? மக்களுக்காக மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ள அரசியல் கட்சிகள், சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல் - டீசல் விலை உயர்வை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்புங்கள்.

அதிமுக ஆட்சியில் 2012, 2013, 2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் சுமார் 37 விழுக்காடு மின்சார உயர்வை அறிவித்தது. 1.59 லட்சம் கோடி மின்துறை கடன் வைத்தது ஏன்? உதய் திட்டத்தில் அதிமுக அரசு ஏன் கையெழுத்திட்டது? யார் நிர்பந்தம் காரணமாக உதய் திட்டத்தில் சேர்ந்தார்கள் என எஸ்.பி.வேலுமணி பதில் சொல்லட்டும்.

தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கேஸ் விலைபோல மொத்த பணத்தையும் பெற்றுவிட்டு வங்கி கணக்கில் மானியம் வழங்கப்போவதில்லை. மின் கட்டணத்திற்காக மானியத்தை கழித்து விட்டுதான் கட்டணத்தை செலுத்தப் போகிறார்கள்.

திமுக, தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு ஏன் போராடவில்லை - செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.