இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைககள், முதல் முறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் காந்தி மாநகர் வின்சென்ட் பள்ளியில் வாக்கு அளிக்க ஒய்வு பெற்ற அரசு அதிகாரியான பாலகிருஷ்ணன் என்பவர் 9 மணியளவில் சென்றுள்ளார். அப்போது வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, ஏற்கனவே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.