அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு பாஜக ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நிதி திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவைக்கு வந்த அவரை காந்திபுரம் பகுதியில் தனியார் ஹோட்டலில் காவல்துறையினர் கைது செய்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்திருந்து விடுவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி திரட்ட வந்ததாகவும் அவ்வாறு நிதி திரட்டும்போது தீவிரவாத, அடிப்படைவாத சக்திகள் தன்னை தாக்கக்கூடும் என்பதால் காவல்துறையினர் கைது செய்தார்கள்.
என்னை காக்க வேண்டியவர்கள் என்னை முடக்க நினைப்பது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு இடத்தில் என்னை காவல்துறை பாதுகாக்காமல் தடுத்து கைதுசெய்கின்றனர். எதிர்க்கட்சிகளும் அடிப்படை வாதிகளும் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். கோவையிலும் இதுபோன்றே காவல்துறை கைது செய்து விட்டது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ராமர் கோயில் நிதி சேகரிப்பு பணியை தொடங்கிவைத்த தருமபுரம் ஆதினம்!