சென்னை வேளச்சேரியில் கடந்த சில தினங்கள் முன்பு நடைபெற்ற கூட்டத்தில், அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை அவதூறாகப் பேசினார்.
இதனைக்கண்டித்து பொள்ளாச்சி நெகமம் பேருந்து நிலைய முன்பு கோவை தெற்கு மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் அனுமன் சேனா தலைவரை கைது செய்யக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பிரபு கூறுகையில் “வேளச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் திருமாவளவனையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் கொலை செய்வதாகவும் சேனா தலைவர் ஸ்ரீதர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொர்பாக தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதரை கைது செய்யவில்லை என்றால் தலைமையில் வரும் உத்தரவையடுத்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்”. என தெரிவித்தார்.