ETV Bharat / state

"உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதித்துறை நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்" - வானதி சீனிவாசன்! - Covai south constituency MLA

Vanathi Srinivasan: கோவை மாவட்ட பாஜக சார்பில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதித்துறை நபர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என கூறினார்.

Vanathi Srinivasan
"உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதித்துறை மீது நடவடிக்கை வேண்டும்" - வானதி சீனிவாசன்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 9:30 PM IST

Updated : Dec 21, 2023, 10:12 PM IST

"உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதித்துறை நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்" - வானதி சீனிவாசன்!

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட பாஜக சார்பில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்குப் போர்வை, புடவை, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், "தென் மாவட்டங்களுக்குக் கோவை மாநகரிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், புடவை, போர்வை அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இங்கு இருந்து அனுப்புகின்றோம்.

தென் மாவட்ட மக்கள் வேதனையில் பங்கெடுக்க எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், பாரதிய ஜனதா கட்சி அதில் முன் நின்று மக்களோடு இணைந்து பணியாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த பகுதியில் இருக்கும் வட இந்திய வியாபாரிகள் போர்வை பொருட்களை வழங்கி உள்ளனர். வடக்கு, கிழக்கு என பேசுகின்றவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் எந்த பகுதியிலிருந்தாலும், கஷ்டப்படும் மக்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் உதவி செய்யக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களது எண்ணத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர வடக்கு, தெற்கு என்ற பிரிவினை வாதமாக மக்களுடைய சிந்தனையைத் திசை திருப்பக்கூடாது.

திமுக அமைச்சர்கள் தண்டனை: திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்ற போது, அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல் இலக்கா இல்லாமல் செந்தில் பாலாஜி நீடிக்கப்பட்டு உள்ளார். இது மிகப்பெரிய அவமானம். தொடர்ச்சியாக மற்றொரு அமைச்சர் தண்டனை பெற்றுள்ளார்.

இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் அனைவரையும் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு மாநிலத்தின் முதலமைச்சர் நேர்மையாக ஆட்சி செய்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும்.

பாஜக பல்வேறு சந்தர்ப்பங்களில், திமுக கட்சியின் முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஊழலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்பு அதனை உறுதி செய்துள்ளதாக வந்துள்ளது.

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, போன்ற பகுதி மக்களுக்கு நிவாரணப்பொருட்களை கோவை சோபா சிண்டிகேட் நிறுவனத்தின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டது.#FloodRelief pic.twitter.com/ykQLaJaupD

    — Vanathi Srinivasan (@VanathiBJP) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமைச்சர் பொன்முடி வழக்கை விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் இந்த வழக்கை மாற்றிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிபதி ஒரு மாத காலத்திற்குள் ஓய்வு பெறக்கூடிய நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உதவுகின்ற நீதித்துறை நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்த வழக்கு சரியான முன் உதாரணம்.

பொங்கலூர் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி அவரது வீட்டில் கர்நாடக காவலர்கள் சோதனை நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, திமுக ஊழலின் மறுவடிவம். அதிகார துஷ்பிரயோகத்தை தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்று, நேற்று அல்ல; பல்வேறு காலமாக திமுக செய்து வருகிறது. மத்தியில் நேர்மையான நிர்வாகம் நடந்து வருகிறது. திமுக என்றாலே லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் என்றார்.

எண்ணூர் எண்ணெய் கசிவு: எண்ணூர் பாதிக்கப்பட்ட மக்களோடு நாங்கள் இருக்கிறோம். வேண்டுமென்றே எண்ணெய் நிறுவனம் எண்ணெய்யைக் கசிய விட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடைய பாதுகாப்பு மிக மிக முக்கியமானது என்றார்.

இதையும் படிங்க: எம்.பிக்களை இடைநீக்கம் செய்து விட்டு 3 மசோதாக்கள் நிறைவேற்றம்: பாஜகவிற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - டி.ஆர்.பாலு!

Last Updated : Dec 21, 2023, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.