ETV Bharat / state

ஸ்டாலினை முதலமைச்சராக்க சபதம் ஏற்ற கிணத்துக்கடவு திமுகவினர்!

கோவை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூரில் திமுகவினர் சபதம் ஏற்றனர்.

Vadasithur dmk office opening function
ஸ்டாலினை முதலமைச்சராக்க சபதம் ஏற்ற கிணத்துக்கடவு திமுகவினர்
author img

By

Published : Sep 14, 2020, 10:53 PM IST

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துகடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூரில், திமுக ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மற்றும் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை ஏற்றார். புதிய திமுக கட்சி அலுவலகத்தை மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்வில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், திமுகத் தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக அரியணை ஏற சபதம் ஏற்போம் என்றார். நிகழ்வில் மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், " வேளாண் உதவித்தொகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தையில் மிகப்பெரிய மோசடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக்கொள்கின்றன.

ஸ்டாலினை முதலமைச்சராக்க சபதம் ஏற்ற கிணத்துக்கடவு திமுகவினர்

இந்த நிலை மாற; மாநிலத்தின் அனைத்து நிர்வாகமும் திறம்பட செயல்பட 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் அரியணையில் ஏற வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லிக்கு புறா விடு தூது’ - தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.