ETV Bharat / state

சாலையில் திடீரென ஏற்பட்ட குழியில் சிக்கிய லாரி! - covai district news

கோயம்புத்தூர்: சாலையில் திடீரென ஏற்பட்ட மூன்று அடி குழியினுள் லாரி ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Truck stuck in a pothole on the road
Truck stuck in a pothole on the road
author img

By

Published : Apr 26, 2021, 10:10 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மரக்கடை பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் ஏற்பட்ட 3 அடி குழியினுள் அதிகாலை லாரி ஒன்று சிக்குண்டது. உடனடியாக லாரியின் ஓட்டுநர் தெரிந்தவர்களுக்குத் தகவலளித்தார். அதன்பேரில் அங்கு வந்தவர்கள் பழு தூக்கும் இயந்திரத்தின் மூலம் சிக்குண்ட லாரியை வெளியே எடுத்தனர்.

சாக்கை நீர் அரித்து சாலையில் பள்ளம் விழுந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதனை சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ பார்வையிட்டார்.

அதிக கூட்ட நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் திடீரென பள்ளம் விழுந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாகச் சரிசெய்ய வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குழியில் சிக்கிய லாரி
இதேபோன்று இதனை ஒட்டியுள்ள புரூக் பீல்டு சாலை, சுக்ரவார்பேட்டை சாலை போன்ற பகுதிகளிலும் அடிக்கடி சாலையில் பள்ளம் விழுகிறது. இதற்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.