ETV Bharat / state

தண்டவாளத்தில் கற்களை வைத்தால் சிறை! ரயில்வே காவல் துறை எச்சரிக்கை - கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்: தண்டவாளத்தில் கற்களோ இரும்புத் துண்டுகளோ வைத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என ரயில்வே காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்ற நபர்கள்!
author img

By

Published : Jul 29, 2019, 11:21 AM IST

கோவை மாவட்டம் மின்நகர், ஜோதிநகர், அமைதி நகர், மாக்கினாம்பட்டி ஆகிய பகுதிகள் ரயில்பாதை அருகே அமைந்துள்ளன. இந்த ரயில்பாதை அருகே இரவில் மது அருந்தவரும் சிலர் தண்டவாளத்தில் கற்களை வைத்து செல்வதாக புகார்கள் வந்துள்ளதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் ரயில்வே துறை காவலர்கள் சார்பில் ரயில் பாதை கடந்து செல்லும், மின்நகர், ஜோதிநகர், அமைதி நகர், மாக்கினாம்பட்டி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

பரப்புரையின்போது, "பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு, மதுரை, திருச்செந்தூர், கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். ரயில் தண்டவாளத்தில் அமர்வது, மது அருந்துவது, சீட்டு ஆடுவது, கைப்பேசியில் பேசியபடி நடப்பது, செல்ஃபி எடுப்பது ஆகிய செயல்களால் ரயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தண்டவாளத்தில் கல், மரக்கட்டை, இரும்புத் துண்டுகள் வைப்பதால் ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை வைத்துச் சென்ற நபர்கள்!

மேலும் இது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்" என ரயில்வே காவல் துறையினர் எச்சரித்தனர்.

Intro:track issueBody:track issueConclusion:பொள்ளாச்சியிலிருந்து உடுமலைசெல்லும் ரயில் பாதையில் கடந்தசில தினங்களுக்கு முன்பு , வடஇந்திய தொழிலாளர்கள் சிலர்மதுபோதையில் தண்டவாளத்தின்குறுக்கே கற்களை வைத்துசென்றனர். இதில் ரயில் மோதியது.இது குறித்து ரயில்வே போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று ரயில்வேபாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்ரஞ்சித்குமார், பழநி ரயில்வேபோலீஸ் எஸ்.ஐ பொன்னுசாமிமற்றும் ரயில்வே போலீஸார்  ரயில்பாதை கடந்து செல்லும், மின்நகர்,ஜோதிநகர், அமைதி நகர், மாக்கினாம்பட்டி பகுதிகளில்ரயில்பாதை அருகே வசிக்கும்பொதுமக்களிடம் விழிப்புணர்வுபிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தின் போது,பொள்ளாச்சியிலிருந்து, பாலக்காடு,மதுரை, திருச்செந்தூர், கோவை உள்பட பல்வேறுஇடங்களுக்கு ரயில்கள்இயக்கப்படுகின்றன.  இந்தரயில்களில்தினமும்ஆயிரக்கணக்கானோர்பயணிக்கின்றனர் . ரயில்தண்டவாளத்தில்  மது அருந்துவது, சீட்டு ஆடுவது, அமர்வது,செல்போனில் பேசியபடி நடப்பது, செல்பி எடுப்பது ஆகியசெயல்களால் ரயில் மோதிஉயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தில் கல், மரக்கட்டை,இரும்பு துண்டுகள் வைப்பதால்ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்படும்ஆபத்தும் உள்ளது.  குழந்தைகளைதண்டவாளம் அருகில் விளையாடஅனுமதிக்ககூடாது . ரயில் பாதைபாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால்ரயில்பாதையில் அத்துமீறியசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீதுகடுமையான சட்டப்பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யபட்டால் 10 ஆண்டுகள் வரைசிறை தண்டனை கிடைக்கும் எனஎச்சரித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.