பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட விகாஸ் பூஷன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் ரயில் மூலம் வழிதவறி கோவை வந்தார். இதனையடுத்து ரயில் நிலையத்திற்கு வெளியே சுற்றித்திரிந்த இவரைப் பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முழு விவரம் எதுவும் கிடைக்காத நிலையில், அவருடைய பெற்றோர் தொலைப்பேசி எண் மட்டும் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்களது பெற்றோர் ஹிந்து பூஷன் சேர்க்கவே, மாதவி ராணிக்குத் ஆகியோருக்கு ரயில்வே காவல்துறையினர் தகவல் கொடுத்து அங்குள்ள மனநல மருத்துவமனையில் விகாஸை அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவரது பெற்றோர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் பீகாரில் உள்ள அவரது பெற்றோர் சேவா பாரதி அமைப்பைத் தொடர்பு கொண்டு, கோவையில் உள்ள அதன் கிளைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் கோவையில் உள்ள சேவா பாரதி அமைப்பினர், விகாஸை கடந்த மாதம் 29ஆம் தேதி இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல் நலம் தேறியதால் பெற்றோர்களுடன் மீண்டும் விகாஸ் சொந்த ஊருக்கு அனுப்பட்டார் .
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பத்திரமாக மீட்டு மருத்துவச் சிகிச்சை அளித்த சேவா பாரதி தமிழ்நாடு மாநில தலைவர் ராமநாதன், மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் ஆகியோருக்கு அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.