கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அலுவலகத்தை வரும் 8ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறயுள்ளது.
கோவையில் கிளை வாரியாக பூத் கமிட்டி அமைத்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டு நிறைவேற்றப்படும். மாவட்ட திமுகவினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டு, திமுக ஆட்சியை அமைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் நாடகம் ஆடுகிறார்’ - துரைமுருகன் கண்டனம்