கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலைஅடுத்த காளியாபுரம், வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் இல்லாததால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.
வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி குழாய் சீரமைக்கும் பணி நடைபெறாததால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காளியாபுரம் பிரிவு பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார், மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் குழாய் பழுது உடனே சரி செய்யப்படும் என்று தெரிவித்தையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.