கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோலார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கிருமி நாசினி தெளிப்பு சுரங்க நடைபாதையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா அச்சுறுத்தல் குறித்த வதந்திகளால் லட்சக்கணக்கான முட்டைகள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி, கறிக்கோழிகள் பல உயிருடன் அழிக்கப்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கடும் நட்டத்தை சந்தித்துள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில், தேக்கமடைந்துள்ள முட்டைகளை அண்டை மாநிலங்களுக்கு விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: திருப்பூரில் 20 ரூபாய்க்கு விற்பனையாகும் கறிக்கோழி!