தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'தக்தே' புயலாக உருமாறி இருக்கிறது. இதன் காரணமாக கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட்' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 54 பேர் கொண்ட இரண்டு பேரிடர் மீட்புக் குழுவினர் கோவை வந்தடைந்தனர்.
அவர்கள் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை - ஏன் தெரியுமா?