ETV Bharat / state

சாதியை சொல்லி திட்டிய தலைமையாசிரியர் மீது நடவடிக்கை தேவை - பெற்றோர்கள் மனு - parents petition

கோவை: அரசு பள்ளியில் மாணவர்களை சாதி பெயரை சொல்லித் திட்டி , கழிவறையை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்திய தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பெற்றோர்கள் மனு
author img

By

Published : Jun 24, 2019, 5:24 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், கரட்டுமேடு பகுதியில் அரசு மாநகராட்சி ஆரம்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஜெயந்தி என்பவர் கடந்த 19ஆம் தேதி அதே பள்ளியில் படிக்கும் வெண்ணிலா, பூபதி ஆகிய இருமாணவர்களையும் சாதி பெயர் சொல்லி திட்டி, கழிவறையை சுத்தம் செய்யக்கோரி வற்புறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக மனுஅளித்த பெற்றோர்கள்

இதையடுத்து அந்த மாணவர்கள் பள்ளியில் நடந்தவற்றை தங்களது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமையாசியர் தனது கணவர், உயர் அலுவலர்களின் கீழ் வேலை செய்து வருவதால், எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

சு.சீனிவாசன்.     கோவை

அரசு பள்ளியில் மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியும் , பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்றோர்கள் மனு 

சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளியில் லட்சுமணன் என்பவரின் மகள் திவ்யபாரதி நான்காம் வகுப்பும், மகன் பூபதி மூன்றாம் வகுப்பும் , அம்ஸ் கண்ணன் என்பவரின் மகள் வெண்ணிலா நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பள்ளியில் இருந்த போது பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்தி மாணவ மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பிரம்பால் அடித்ததில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி பெற்றோர்கள் தலைமையாசிரியரை கண்டித்து அன்றே பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது தங்களது குழந்தைகளை தாழ்ந்த சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யச்சொல்லி தலைமையாசிரியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் ஜெயந்தி தாழ்ந்த  சாதியில் பிறந்தால் எங்கு நல்ல குணம் வரும், நல்ல சாதியில் பிறந்து இருந்தால், நல்ல குணம் வரும் என சாதிய ரீதியாக பேசியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தன்னுடைய கணவர் உயர்ந்த அதிகாரியிடம் வேலை செய்து வருவதால் ஒன்றும் செய்ய முடியாது என பெற்றோர்களை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் தலைமையாசிரியரின் சாதிய வெறியால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாக கூறினர். சாதிய ரீதியாக செயல்படும் தலைமையாசிரியர் ஜெயந்தி மீது துறை ரீதியாகவும், வேறு இடத்திற்கு பணி மாறுதல் கொடுக்காமல் , பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது இந்த ஆரம்பபள்ளியின் தலைமையாசிரியை இதேபோல தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப்பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் உள்ள பள்ளியில் சென்று சேர்த்துள்ளதாகவும் கூறினார். மேலும் பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே பெற்றோர்கள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசனிலும் வட்டார கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்தது  குறிப்பிடத்தக்கது.

Video in ftp

TN_CBE_2_24_TEACHER ISSUE_PETITION_9020856
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.