கரோனா வைரஸ் (தீநுண்மி) தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை, இந்நிலையில் 2019-20ஆம் கல்வியாண்டில் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் தனியார் மூலம் (டுடோரியல், அஞ்சல்) தேர்வு எழுதிவரும் தனித்தேர்வர்களின் தேர்ச்சி குறித்து எவ்வித தகவலும் அரசு அறிவிக்கவில்லை.
இது குறித்து அம்மாணாக்கர் கூறுகையில், “தமிழ்நாடு அரசு தனியார் மூலம் தேர்வு எழுதிவரும் எங்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசு கூறினால் அடுத்தக்கட்ட முயற்சியை எடுக்க முடியும்.
உடனடியாக எங்களின் தேர்ச்சி விகிதம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்” என்றனர். இது குறித்து கோவை மாவட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 4.25 லட்சத்தை எட்டிய கரோனா பாதிப்பு!