கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூலக்கல், அரண்மனை புதூர் ஆகிய கிராமங்களிலிருந்து வரும் மாணவ, மாணவிகள் சூலக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்காத காரணத்தினால், விளையாட்டு உபகரணங்கள் உபயோகமில்லாமல் இருக்கின்றன.
மேலும், இந்த உபகரணங்கள் மிகவும் பழுதான நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள கிராமப்புற நிர்வாக அலுவலகத்திற்குப் பின்னால் கிடக்கின்றன. இதனால், விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை நீடித்துவருகிறது.
எனவே, மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 90 கி.மீ., தூரம்... ஒரு மணி நேரம்... அசுர வேகம் - 3 வயது குழந்தையைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்!