ETV Bharat / state

புனித காசி யாத்திரை; பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு!

Kashi Yatra: பொள்ளாச்சியில் இருந்து முதல்முறையாக புனித காசி யாத்திரை மேற்கொள்ள, சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து புனித காசி யாத்திரை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 5:32 PM IST

பொள்ளாச்சியிலிருந்து புனித காசி யாத்திரை

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் இயங்கி வரும் திருச்செந்தூர் முருகன் என்ற அமைப்பு சார்பில் காசிக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்தப் புனித யாத்திரை பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு ரயில் மார்க்கமாக திட்டமிடப்பட்டது.

புனித காசி யாத்திரையில் பங்கு பெற விருப்பம் தெரிவிக்கும் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் பணி, சுமார் 8 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், 300க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அனைவரும் யாத்திரை செல்வதற்காக, இன்று (செப்.29) பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து முதல் முறையாக காசிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்திருந்த 1,320 பேர் புனித காசி யாத்திரை மேற்கொள்ளும் நிலையில், அவர்களை வழியனுப்ப குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

புனித யாத்திரைக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ரயில், மொத்தம் 21 பெட்டிகளைக் கொண்டுள்ளது. மேலும், இந்த யாத்திரையில் அலகாபாத், அயோத்தியா, புத்த கயா, வாரணாசி உள்ளிட்ட திருத்தலங்களிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதனால், பயணத்தின் முதல் நாளான இன்றிலிருந்து (செப்.29) தொடர்ந்து 9 நாட்களுக்கு, அதாவது வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் புனித காசி யாத்திரை மேற்கொள்ள முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளது இந்த பயணத்தின் சிறப்பு அம்சமாகும். இது போன்ற ஆன்மிகப் பயணங்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் காசி யாத்திரைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள வந்தவர்களை, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழி அனுப்ப வந்ததால் ரயில் நிலையம் பல வருடங்களுக்குப்பின் விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சியளித்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "ஆசிரியர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்" - தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.