ETV Bharat / state

அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - தனித்தீர்மானம் கொண்டு வருவதாக எஸ்.பி.வேலுமணி பேச்சு - coimbatore news today

அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - தனித்தீர்மானம் கொண்டு வருவதாக எஸ்.பி.வேலுமணி பேச்சு

author img

By

Published : May 21, 2023, 1:15 PM IST

உயிரிழந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர்: கரடிமடை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு, அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும், திமுகவினருக்கும் இடையே டாஸ்மாக்கில் ஏற்பட்ட வாக்குவாதப் பிரச்னையில் செல்வராஜ் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயிரிழந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையையும் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “கோவையில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடக்கிறது. குறிப்பாக, கோவை கரடிமடையில் அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதைக் கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக் நடத்தும் திமுகவைச் சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வளவு தைரியமாக இந்தக் கொலையை நிகழ்த்தி உள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக காவல் துறையினரும் துணையாக உள்ளனர். கோவையில் கள்ளத்தனமாக மது விற்பனையைத் தடுக்காத காவல் துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவினர் போராடுவோம். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித் தீர்மானம் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு, அதிமுக பிரமுகரான செல்வராஜ், காளம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த மதுபானக் கடையில் மது வாங்க சென்றுள்ளார். அப்போது, மது வாங்கச் சென்ற செல்வராஜ் உடன் அங்கு இருந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, செல்வராஜ் அங்கிருந்து புறப்பட்டு தனது ஊரான கரடிமடைக்குச் சென்றுள்ளார். இவ்வாறு செல்வராஜ் சென்ற வழியில், ராகுல் - கோகுல் இருவரும் அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், செல்வராஜை தாக்கி இழுத்து வந்துள்ளனர். பின்னர், அங்கு இருந்த காட்டுப் பகுதிக்குள் செல்வராஜை இழுத்துச் சென்று, இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் காவல் துறையினர், உயிரிழந்த செல்வராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில், செல்வராஜை ராகுல் - கோகுல் இருவரும் தாக்கி இழுத்துச் சென்றதைப் பார்த்ததாக பொதுமக்கள் காவல் துறையில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த கணவரை முன்னாள் காதலனுடன் தீர்த்துக் கட்டிய மனைவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.