கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்த சம்பவத்தில் ஜெமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் உபா சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் அப்சல்கான் என்பவரையும் ஆறாவதாக கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கானது என்ஜஏவிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து என்ஜஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடம் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இவர்கள் ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஜஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இன்று (நவ. 7) ஆறு பேரும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு? சம்பந்தப்பட்டவர் மீது பெற்றோர் புகார்