கோயம்புத்தூர்: சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரிக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அலுவலர்கள் பயிற்சிக்காக வந்துள்ளனர்.
பயிற்சிக்கு வந்த பெண் விமானப்படை அலுவலர் ஒருவர், கடந்த 10ஆம் தேதி தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு பயிற்சிக்கு வந்த அமிர்தேஷ் என்ற விமானப்படை அலுவலர், பெண் அலுவலரை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் கோயம்புத்தூர் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் விமானப்படை கல்லூரியில் (IAFC) பயிற்சியில் இருந்த அமிர்தேஷ் என்ற விமானப்படை அலுவலரை கோயம்புத்தூர் காவல் துறையினர் கைது செய்து நேற்று (செப்.25) இரவு, நீதிபதி இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விமானப்படை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இவ்விவகாரத்தில் கோயம்புத்தூர் காவல்துறை அவகாசம் கேட்ட நிலையில், விமானப்படை அலுவலர் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து அமிர்தேஷை உடுமலை கிளைச்சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். மேலும் காவல் துறையினர் கூறும்போது, லெப்டினன்ட் அமிர்தேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாளை (செப்.27) நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் தன்மை இருக்கும் எனவும் கூறினர்.
இதையும் படிங்க:மனைவியை ஆசிட் வீசி கொன்ற கணவன் - பாய்ந்த குண்டர் சட்டம்