ETV Bharat / state

ஏழு வீடுகளில் தொடர் கொள்ளை: வெளியான சிசிடிவி - Serial robbery of seven houses in covai

விடுதியில் தொடர்ச்சியாக ஏழு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

thief_CCTV
thief_CCTV
author img

By

Published : Jul 31, 2021, 4:54 PM IST

கோவை: மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ் பகுதியில் வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அங்கு வசிப்பவர்கள் ரவிக்குமார் (விடுதி உரிமையாளர்), ரவிச்சந்திரன் (ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர்), வெங்கட் (ஓய்வுபெற்ற மென்பொருள் பொறியாளர்) உள்பட ஏழு பேர் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து கீழ் தளத்திற்குச் சென்று பீரோவில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, மதுக்கரை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை வல்லுநர்கள், காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

ஏழு வீடுகளில் தொடர் கொள்ளை

மேலும் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சிசிடிவி வெளியாகியுள்ளது. இந்தக் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: நூதன முறையில் மூதாட்டியிடம் நகைக் கொள்ளை: போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.